ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள சிறைச்சாலை மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில், ரஷ்ய படைகளால் சிறை பிடிக்கப்பட்டிருந்த உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு

0 1719

ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள சிறைச்சாலை மீது உக்ரைன் படைகள் நிகழ்த்திய தாக்குதலில் அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த உக்ரைனிய வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒலனிவ்கா (Olenivka) நகரில் உள்ள அந்த சிறைச்சாலை மீது, அமெரிக்காவால் வழங்கப்பட்ட ஹிம்மர் வாகனங்கள் மூலம் உக்ரைன் படைகள் ராக்கெட் ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அங்கு ரஷ்ய படைகளால் சிறை வைக்கப்பட்டிருந்த உக்ரைன் வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 75 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments