கள்ளக்குறிச்சி கலவரம் : காவல்துறை விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்..!

0 1843
கள்ளக்குறிச்சி கலவரம் : காவல்துறை விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்..!

கள்ளக்குறிச்சி கலவரத்தில் காவல்துறை விசாரணைக்கு இடையூறாக உள்ள சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறை முடிவெடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலவரம் தொடர்பாக காவல்துறையின் தற்போதைய விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்த தமிழக அரசு, மாணவி மரணம் மற்றும் கலவரத்தின்போது வதந்தி பரப்பி, ஊடக விசாரணை நடத்திய 27 முகநூல் பக்கங்கள், 63 யூ-டியூப் மற்றும் 31 டிவிட்டர் கணக்குகள் ஆகியவற்றில் உள்ள பதிவுகளை நீக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுவருவதாக அரசு கூறிய நிலையில், இதேநிலை தொடரக்கூடாது என்றும் விரைவில் நேரடி வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி சதீஷ்குமார் விசாரணையை ஆகஸ்ட் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments