டாரஸ் லாரி ஓட்டுநரின் கவனக்குறைவால் லாரியில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட நபர்.!

0 2379

கேரள மாநிலம் திருச்சூரில், லாரி ஓட்டுநரின் கவனக்குறைவால், 60 வயது நபர் ஒருவர் இருசக்கர வாகனத்துடன் லாரிக்கு அடியில் சிக்கி சாலையில் இழுத்து செல்லப்பட்டார்.

எடமுட்டம் பகுதியில் அரசுப்பேருந்துக்கு பின்னால் இருசக்கர வாகனம் ஒன்று நின்றதை கவனிக்காத அந்த ஓட்டுநர், டாரஸ் லாரியை இயக்கியதால், அதன் அடியில் இருசக்கர வாகனத்துடன் சிக்கிக்கொண்ட ஓட்டுநர் சிறுது தூரம் இழுத்து செல்லப்பட்டார்.

அங்கிருந்தவர்களின் கூச்சல் சத்தத்தை கேட்டு ஓட்டுநர் டாரஸ் லாரியை நிறுத்தினார். காலில் பலத்த காயம் அடைந்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments