கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் இரண்டு பேர் பலி
பெரம்பலூர் மாவட்டம், கவுல்பாளையத்தில் கல்குவாரி ஒன்றில் திடீரென பாறை சரிந்து விழுந்ததில், குவாரி உரிமையாளரின் சகோதரர் சுப்பிரமணியும், லாரி ஓட்டுநர் செந்தில் குமாரும் உயிரிழந்தனர்.
மேலும் ஒரு தொழிலாளி காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உடல் கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
விபத்து நடந்த குவாரியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா, காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்ட கல்குவாரிக்கு தற்காலிகமாக சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Comments