அதிமுக பொதுக்குழு வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கும் - உச்ச நீதிமன்றம்

0 1733

அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர் நீதிமன்றமே முடிவெடுக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இதை இன்று விசாரித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா, சமரசம் செய்து கொள்ள தயாரா என இரு தரப்பினரிடமும் கேள்வி எழுப்பினார்.

மேலும், பொதுக்குழு தொடர்பாக எத்தனை வழக்குகள் உள்ளது என்றும் வினவினார். அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்ற அமர்வே முடிவு எடுக்கும் என்றும் எனவே அங்கு செல்லுமாறு ஓபிஎஸ்-க்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

பொதுக்குழு தொடர்பான வழக்கை 3 வாரங்களுக்குள் முடிக்கவும் அதுவரை தற்போதைய நிலை தொடர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments