கள்ளக்குறிச்சி கலவரம்.. வீடியோ காட்சிகளின் அடிப்படையில் மேலும் 2பேர் கைது.!

0 9934

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக மேலும் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

அந்த பள்ளியில் உள்ள பொருட்களைக் கொண்டு வந்து சாலையில் போட்டு பாறாங்கற்களை கொண்டு நசுக்கி வன்முறையில் ஈடுபட்ட பாலாஜி என்பவர் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

அதே நாளில்  பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய  சஞ்சீவ் என்பவரும் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments