தாய்க்கு தான் குழந்தையின் குடும்ப பெயரை தீர்மானிக்கும் உரிமை இருக்கிறது - உச்சநீதிமன்றம் .

தந்தையின் மறைவுக்குப் பிறகு தாய்க்கு தான் குழந்தையின் குடும்ப பெயரை தீர்மானிக்கும் உரிமை இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், குழந்தைக்கு இயற்கையான பாதுகாவலர் என்ற முறையில் தாய்க்கே அதிக உரிமை இருப்பதாக குறிப்பிட்டனர்.
குடும்ப பெயர் ஒரு சமூக அடையாளமாக இருப்பதையும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.
ஒரு குடும்பத்தின் இதர உறுப்பினர்களுடன் குடும்ப பெயர் தொடர்பை ஏற்படுத்தித் தருவதால் தாய்க்கு தந்தையின் மறைவுக்குப் பிறகு குழந்தைக்கு தமது குடும்ப பெயரை இணைப்பதில் முழு உரிமை இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Comments