அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலி.!

அமெரிக்காவின் Kentucky மாகாணத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி 8பேர் உயிரிழந்தனர்.
வெள்ள நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சுவதாக மாகாண ஆளுநர் Andy Beshear தெரிவித்தார்.
மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் தாக்கிய புயல் காரணமாக 6 நகரங்களுக்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.வெள்ளம் காரணமாக 23ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கி கிடப்பதாகவும் மேலும் பலரை காணவில்லை என்றும் ஆளுநர் தெரிவித்தார்.
சாலைகளில் வெள்ளம் ஆறு போல் பாய்ந்து ஓடுவதாக உள்ளூர் ஊடகங்கள் வீடியோ வெளியிட்டுள்ளன.
Comments