மெக்சிகோவில் டிரக்கில் மறைந்து அமெரிக்காவிற்கு செல்ல முயன்ற 98 அகதிகள் பிடிபட்டனர்.!

0 1513

மெக்சிகோ நாட்டின் Veracruz மாகாணத்தில் டிரக்கில் மறைந்து அமெரிக்காவிற்கு செல்ல முயன்ற 98 அகதிகள் பிடிபட்டனர்.

Acayuca நகரின் தென்பகுதியில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது டிரக் ஒன்று ஆள் அரவமற்ற இடத்தில் தனியாக நிற்பதை கண்டனர்.

உடனடியாக அங்கு சென்ற பார்த்த போது அந்த டிரக்கில் ஏராளமானோர் காயங்களுடன் நெருக்கி அடித்தபடி அமர்ந்திருப்பதை கண்டனர். விசாரணையில் அவர்கள் அமெரிக்காவிற்கு அகதிகளாக செல்ல இருப்பது தெரிய வந்தது.

அந்த டிரக்கில் 400பேர் வந்திருக்கலாம் என்றும் இட நெருக்கடியால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் பலர் கீழே இறங்கி மறைந்து இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments