ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை ஒரு மணி நேரத்தில் கொட்டித்தீர்த்தது.. வெள்ளக்காடாக மாறிய சீனா..

சீனாவின் லுயோயாங் நகரில் ஒரு மாதம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரு மணி நேரத்தில் கொட்டித்தீர்த்ததால் அந்நகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
சீனாவின் லுயோயாங் நகரில் ஒரு மாதம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரு மணி நேரத்தில் கொட்டித்தீர்த்ததால் அந்நகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
70 லட்சம் பேர் வசிக்கும் லுயோயாங் நகரில் ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 100 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதனால் பள்ளிகள், கடைகள், சுரங்க ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. பாலத்திற்கு அடியில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணியை மீட்பு குழுவினர் போராடி மீட்டனர்.
சீனாவில், மழைப்பொழிவு அதிகம் உள்ள சமவெளிகள், நகரமயமாக்கலைத் தொடர்ந்து காங்கிரீட் காடுகளாக மாறியதால், மழைநீர் நிலத்தில் புக முடியாமல் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
Comments