சென்னையில் குரங்கம்மை பரிசோதனை ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி

0 2176
சென்னையில் குரங்கம்மை பரிசோதனை ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் குரங்கம்மை பரிசோதனை ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் குரங்கம்மை பரிசோதனை மேற்கொள்ள உள்ள ஆய்வகத்தை பார்வையிட்டபின் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், 77 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் இடத்தில் 1000 மருத்துவ பணியாளர்கள் மற்றும் 30 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments