தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

0 4193
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், கரூர், நாமக்கல், வேலூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் நாளை 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments