ஆன்லைன் ரம்மி விளையாடி சுமார் 18 லட்சம் ரூபாயை இழந்த இளைஞர் மனமுடைந்து தற்கொலை!

0 6084

தருமபுரி மாவட்டம் முத்தானூர் கிராமத்தில் சொந்த வீட்டை விற்க முன்பணம் பெற்று ஆன்லைன் ரம்மி விளையாடி சுமார் 18 லட்சம் ரூபாயை இழந்த இளைஞர் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்டார்.

பிரபு என்ற அந்த நபர் தனியார் கிரானைட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாகவும், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 15 லட்சம் ரூபாயும், கேரள லாட்டரியில் 3 லட்சம் ரூபாயும் அவர் இழந்ததாகவும் கூறப்படுகிறது.

மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த அவர், பணம் இழந்த மனஉளைச்சலில் இன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments