நள்ளிரவில் 5 முகமூடி கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.25 லட்சம் கொள்ளை..!

நள்ளிரவில் 5 முகமூடி கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.25 லட்சம் கொள்ளை..!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒன்னேகால் லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் முகமூடி அணிந்தபடி கொள்ளையர்கள் சாலையில் நடந்து செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
வாகான்காடு குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஜெய்கணேஷ் என்பவரின் வீட்டில் கடந்த 21-ம் தேதி நள்ளிரவு பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் வீட்டில் இருந்த ஒன்னேகால் லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வரும் நிலையில், ஜெய்கணேஷின் வீட்டிற்கு அருகே 5 கொள்ளையர்கள் சாலையில் முகமூடி அணிந்துபடி நடந்து செல்லும் காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
Comments