இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்களுக்கு ஒரு லட்சம் அபராதம்..!

0 3160
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்களுக்கு ஒரு லட்சம் அபராதம்..!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சூளையில் உள்ள அருள்மிகு சொக்கவேல் சுப்பிரமணியர் திருக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த தனி நபர்கள், நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் இருப்பதாகவும், இதுதொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாமல் காலதாமதம் செய்வதாகவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், காலதாமதத்திற்கான உரிய காரணத்தையும், அதற்கான வருத்தத்தையும் உதவி ஆணையர் தெரிவிக்கவில்லை என்று கூறி, ஆணையருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும், உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments