காதல் மனைவி படிப்பிற்காகவும், மகன் பிறந்தநாள் கொண்டாடுவதற்கும் பெண்ணிடம் கைவரிசை காட்டிய இளைஞர்..!

காதல் மனைவி படிப்பிற்காகவும், மகன் பிறந்தநாள் கொண்டாடுவதற்கும் பெண்ணிடம் கைவரிசை காட்டிய இளைஞர்..!
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே துணி துவைத்து கொண்டிருந்த பெண்ணிடம் 6 சவரன் நகைபறித்து தப்பிச் சென்ற இளைஞரை, வாகன சோதனையில் போலீசார் மடக்கி பிடித்தனர்.
நடுமார்த்தால் பகுதியை சேர்ந்த ஏஞ்சல் என்பவர் அப்பகுதி குளக்கரையில் துணிதுவைத்து கொண்டிருந்த போது, சானல்கரை வழியாக மர்மநபர் கழுத்தில் இருந்த நகையை பறித்து தப்பி சென்றார். இதுகுறித்து ஏஞ்சல் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டர்.
தொடர்ந்து, சிறையான் குழி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவ்வழியாக வந்த இளைஞரை மடக்கி பிடித்து விசாரித்ததில், சிதறால் பகுதியை சேர்ந்த தனுஷ் என்பவர் காதல் மனைவி படிப்பு செலவிற்காகவும், மகனின் பிறந்தநாள் கொண்டாடுவதற்கும் பெண்களிடம் நகை பறித்ததாக வாக்குமூலம் அளித்தார்.
Comments