விரைவில் ஸ்கைபஸ் அறிமுகமாக வாய்ப்பு-மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

0 2286

இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களில்  விரைவில் ஸ்கை பஸ்கள் எனப்படும் பறக்கும் பேருந்துகள் அறிமுகமாக உள்ளன.

ஸ்கைபஸ் என்பது மெட்ரோவைப் போலவே இருக்கும் ஒரு இரயில்வே அமைப்பாகும். மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த பேருந்துகளில் பயணிக்கலாம். எரிபொருளுக்கு மாற்றாக மின்சார ஆற்றலைப் பயன்படுத்தலாம். 

டெல்லி மற்றும் ஹரியானாவின் சில பகுதிகளில் ஸ்கைபஸ்களை இயக்க பரிசீலித்து வருவதாக மத்திய  அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்றுமாசைக் குறைப்பதற்கான மாற்று வழியாக இது இருக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments