நாடாளுமன்ற வளாகத்தில் 20 எம்பிக்கள் விடிய விடிய தர்ணா.. இடைநீக்கம் ரத்து செய்யக் கோரி 50 மணி நேரமாக போராட்டம்..!

0 2575
நாடாளுமன்ற வளாகத்தில் 20 எம்பிக்கள் விடிய விடிய தர்ணா.. இடைநீக்கம் ரத்து செய்யக் கோரி 50 மணி நேரமாக போராட்டம்..!

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 20 எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் 50 மணி நேரத்துக்கும் அதிகமாக தொடர் தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு முழுவதும் அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கழித்தனர்.

ஆறு திமுக எம்பிக்கள், ஏழு திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள், டி.ஆர்எஸ். மார்க்சிஸ்ட் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துக் கொண்டு தங்களை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரினர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எம்பிக்களுக்கு இட்லி சாம்பார், மதிய உணவு போன்றவற்றை திமுக எம்பிக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments