சிறிய ரக விமானத்தை சொந்தமாக உருவாக்கி சாதனை படைத்த இளைஞர்.!

கேரள மாநிலம் ஆழப்புலாவை சேர்ந்த இளைஞர், சொந்தமாக விமானத்தை உருவாக்கி, குடும்பத்துடன் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.
முன்னாள் எம்எல்ஏ தாமரக்சனின் மகனான அசோக் அலிசெரில் லண்டனில் வசித்து வருகிறார். 2018 ஆம் ஆண்டு பைலட் உரிமம் பெற்ற இவர், 4 பேர் பயணிக்கும் வகையில் சிறிய ரக விமானம் வாடகைக்கு கிடைப்பது அரிதாக இருந்ததால், சுயமாக விமானத்தை தயாரிப்பது என கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் முடிவு செய்தார்.
ஒன்றரை ஆண்டுகளில் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் விமானத்தை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார். அந்த விமானத்தில் தனது இரு மகள்கள் மற்றும் மனைவியுடன் ஜெர்மனி, ஆஸ்திரியா போன்ற நாடுகளில் அசோக் உற்சாகமாக பயணம் மேற்கொண்டார்.
Comments