குற்றாலம் பேரருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இரு பெண்கள் உயிரிழப்பு

0 5275
குற்றாலம் பேரருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இரு பெண்கள் உயிரிழப்பு

குற்றாலம் அருவில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். அங்குள்ள பேரருவியில் சிலர் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் 5 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் மீட்கப்பட்ட நிலையில், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த மல்லிகா, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கலாவதி ஆகியோர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அருவியில் குளிக்க தடை விதித்தும் அவர் உத்தரவிட்டார்.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments