சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலி- ஒருவர் படுகாயம்

0 1791
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலி- ஒருவர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

ஒருவர் படுகாயமடைந்தார். அங்குள்ள முத்துமீனா என்ற பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது, இந்த வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 40 வயதுடைய ஜெயராமன் என்ற தொழிலாளி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

பவானீஸ்வரன் என்ற தொழிலாளி படுகாயமடைந்தார். பட்டாசுகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வினால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments