மாடு காணவில்லை என புகார்.. மூதாட்டியையும் அவரது மகளையும் பக்கத்து வீட்டை சேர்ந்த நபர் இரும்பு கம்பியால் தாக்குதல்.!

0 2699

பூந்தமல்லியில் மாடு காணவில்லை என்பதால் தன் மீது சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் கூறிய மூதாட்டியையும் அவரது மகளையும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கும் காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

கரையான்சாவடியை சேர்ந்த 80 வயதான இந்திராணி என்பவரின் மாடு காணாமல் போனதையடுத்து தனது மகள் ரேணுகாவுடன் சென்று பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வீட்டின் அருகே உள்ள ரமேஷ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர்கள் காவல் நிலையத்தில் தெரிவித்திருந்தனர்.

தன் மீது சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் கூறியதால் ரமேஷ் தனது மனைவியுடன் சேர்ந்து இந்திராணியையும் அவரது மகள் ரேணுகாவையும் வீட்டில் இருந்து வெளியே இழுத்துத்தள்ளி இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.

படுகாயம் அடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments