மதுபோதையில் மாநகராட்சி உடற்பயிற்சி கூடத்திற்குள் புகுந்து ரவுடி ரகளை.!

0 2862

சென்னை மயிலாப்பூரில் ரவுடி ஒருவன் மதுபோதையில் உடற்பயிற்சி கூடத்தில் புகுந்து உபகரணங்களை அடித்து உடைத்ததோடு, பிளேடால் தன்னைத் தானே வயிற்றில் கிழித்துக் கொண்டு ரகளையில் ஈடுபட்டான்.

மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் இந்த உடற்பயிற்சி கூடத்தில், அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி அப்துல்லா தினமும் வந்து மது அருந்துவதை வாடிக்கையாக செய்து வந்திருக்கிறான்.

நேற்று மதுபோதை தலைக்கேறிய நிலையில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற அப்துல்லா, அங்கிருந்த உபகரணங்களை அடித்து உடைத்திருக்கிறான். தடுத்து நிறுத்திய இளைஞர்களையும் தாக்கி, தான் வைத்திருந்த பிளேடால் தன்னைத் தானே கிழித்துக் கொண்டு ரகளையில் ஈடுபட்டிருக்கிறான்.

சாலையில் செல்வோர்களையும் ரவுடி தாக்கிய நிலையில், தகவலறிந்து வந்த போலீசார் ரத்தக்காயத்துடன் இருந்த அப்துல்லாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, கைது நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments