திருமணம் செய்துக் கொள்ள விருப்பமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறி பர்தா அணிந்துக் கொண்டு சுற்றித் திரிந்த இளைஞர்.!
கர்நாடகாவில், திருமணம் செய்துக் கொள்ள விருப்பமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறி, பெண் வேடத்துடன் பர்தா அணிந்துக் கொண்டு சுற்றித் திரிந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜயபுரா மாவட்டம் அலமட்டி அணை அருகே பர்தா அணிந்தவாறு ஒரு பெண் சுற்றித்திரிந்ததைக் கண்டு சந்தேகமடைந்த போலீசார், அவரை பிடித்து விசாரித்த போது அவர் பெண் அல்ல.
ஆண் என்பது தெரியவந்தது. ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிகர்ஜூனா சுவாமி என்ற அந்த இளைஞர், தனது விருப்பம் இல்லாமல் வீட்டார் திருமண ஏற்பாடுகள் செய்ததால் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், யாரும் தன்னை கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக பெண் வேடமணிந்து பர்தாவுடன் சுற்றித் திரிந்ததாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார்.
Comments