பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

0 1719

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சோதனை செய்யவும், கைது செய்யவும் மற்றும் சொத்துகளை பறிமுதல் செய்யவும் அமலாத்துறைக்கு அனுமதி உண்டு என சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அமலாக்கத்துறை தகவல் அறிக்கையை குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு வழங்க வேண்டிய அவசியமில்லை என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments