ஆசிரியை தடுக்க முயற்சித்தும் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டையிட்ட பள்ளி மாணவிகள்
நெல்லை பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் மாணவிகள் ஒருவரையொருவர் தலை முடியை பிடித்து சண்டை போட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு உதவி நிதி பெறும் சாரா டக்கர் பள்ளியில் வகுப்பை முடித்துவிட்டு நேற்று மாலை வீடு திரும்பும் வழியில் மாணவிகள் சிலருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த சண்டையை பள்ளி ஆசிரியை தடுக்க முயற்சித்தும், விடாபிடியாக தலை முடியை பிடித்து மாணவிகள் சண்டையிட்டனர்.
சமூக வலைதளங்களில் வெளியான காட்சிகளை வைத்து இன்று காலை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று கைகலப்பில் ஈடுபட்ட மாணவிகளிடம் போலீசார் நடத்தினர்.
பேருந்தில் இடம் பிடிப்பதற்காக முண்டியடித்து ஏற முயன்ற போது தகராறு ஏற்பட்டதாக மாணவிகள் கூறியதை அடுத்து அவர்களது பெற்றோர்களையும் வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
Comments