கணியாமூர் கலவரத்தின் போது பள்ளியின் சுவரை சேதப்படுத்திய இளைஞர் கைது.!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில், பிளஸ் 2 மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தின் போது, பள்ளியின் சுவரை சேதப்படுத்திய கடலூரை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
கலவரம் தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டு சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பள்ளியின் சுவரை சம்மட்டியால் தாக்கி சேதப்படுத்திய இளைஞரை, வீடியோ காட்சியை அடிப்படையாக கொண்டு போலீசார் கைது செய்தனர்.
Comments