திடீரென மாயமான 3 சிறுமிகள்.. விடியவிடிய தேடுதல் பணியில் ஈடுபட்டு பத்திரமாக மீட்ட போலீசார்!

கடலூர் மாவட்டம் முதுநகர் பகுதியில் திடீரென மாயமான 3 சிறுமிகளை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
அயல்தெரு அருகே வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 11, 12 மற்றும் 13 வயதுடைய மூன்று சிறுமிகளும் காணாமல் போனதாக கூறி சிறுமிகளின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தொடர்ந்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மாவட்டம் முழுவதும் விடியவிடிய தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
3 சிறுமிகளும் பேருந்தில் ஏறி குள்ளஞ்சாவடி அருகே உள்ள கிராமத்திற்கு சென்றதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார், சிறுமிகளை பத்திரமாக மீட்டனர்.
Comments