வாகனத்தை ஓட்டி பார்த்துவிட்டு வருவதாக கூறி திருட்டு.. பட்டப்பகலில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் கைவரிசை!

0 1781

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் கடையில் வாகனத்தை ஓட்டி பார்ப்பதாக கூறி முதியவர் ஒருவர் வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

பூவைத்தேடி கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் அப்பகுதியில் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இவரது கடைக்கு பைக் வாங்குவதாக கூறி வந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் Splendor Plus பைக்கை ஓட்டி பார்த்துவிட்டு வருவதாக கூறி இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் அந்த முதியவர் வராததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூர்த்தி, வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments