காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது!

புதுச்சேரியில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த இளைஞரை போலீசார் கைது செய்த போது, அவர் தப்பிக்க முயற்சித்தால் தவறி விழுந்ததில் கையில் முறிவு ஏற்பட்டது.
சன்னியாசிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி, கடந்த 19-ந்தேதி கல்லூரி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அவரது உறவினரான முகேஷ் என்பவரால் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தில், தலைமறைவான முகேஷை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில், சன்னியாசிக்குப்பத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.
Comments