அண்ணனை கொலை செய்தவரை பழிக்குப்பழியாக வெட்டிக் கொன்ற தம்பி உள்பட 6 பேர் கைது

0 5104

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் அருகே அண்ணனை கொலை செய்தவரை பழிக்குப்பழியாக கொலை செய்த தம்பி உள்பட 6பேர் கைது செய்யப்பட்டனர்.

கம்மியம்பேட்டையை சேர்ந்த கருப்பு என்கிற கண்ணன் என்ற ரவுடி நேற்று முன்தினம் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டியும், தலையில் கல்லை போட்டும் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக நடந்த விசாரணையில் கடந்த 2020-ம் ஆண்டு புதுநகரைச் சேர்ந்த காமராஜ் என்பவரை கண்ணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்துள்ளது தெரிய வந்த து. அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments