லடாக் போன்ற 18,000 அடி உயரத்திலும் தொலைத் தொடர்பு சேவை: ராணுவப் பயன்பாட்டிற்கு 4ஜி, 5ஜி நெட்வொர்க் வழங்க முடிவு

0 1928

லடாக் போன்ற 18 ஆயிரம் அடி உயரமுள்ள இடங்களிலும்  தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 4ஜி, 5ஜி சேவைகளை வழங்க இந்திய ராணுவம் ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது.

இரண்டாண்டுகளுக்கு முன் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப் பின், சீனா 5ஜி நெட்வொர்க்கை ஏற்படுத்தி தொலைத்தொடர்பை விரிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில், உயரமான மலைப் பகுதிகளிலும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகளை மேம்படுத்த இந்திய ராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 4ஜி, 5ஜி  ஓராண்டுக்குள் வழங்க நெட்வொர்க் வழங்கும் பணிகளை முடிக்க வேண்டும் எனவும் ராணுவத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments