பாம்பு தீண்டி மரணித்து பாலியல் அரக்கனை அடையாளம் காட்டிய சிறுமி..! வீடியோ எடுத்தவர்களும் சிக்கினர்
திருவள்ளூர் மாவட்டம் எருமவெட்டி பாளையத்தில் 8 வயது சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்த நிலையில் , 4 மாதங்களுக்கு முன்பாக அந்த சிறுமியிடம், 75 வயது முதியவர் ஒருவர் அத்துமீறலில் ஈடுபட்ட வீடியோ வெளியானதால் முதியவர் உள்ளிட்ட 5 பேர் கும்பல் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த 2 வயது சிறுமியை தாய் விட்டுச்சென்ற நிலையில் தந்தையும் உயிரிழந்ததால். திருவள்ளூர் மாவட்டம் எரும வெட்டி பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் வளர்ந்து வந்தார்.
8 வயதான சிறுமி அங்குள்ள அரசு தொடக்கபள்ளியில் 4 வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 24 ந்தேதி வயல் வெளிக்கு சென்ற சிறுமியை பாம்பு கடித்து உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. அந்த சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் அந்த சிறுமியிடம் முதியவர் ஒருவர் அத்துமீறலில் ஈடுபடும் வீடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வலம் வந்தது.
இதனை பார்த்த அந்த சிறுமியின் வளர்ப்புத்தாய் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அந்த வீடியோவை வைத்து விசாரணையை முன்னெடுத்த போலீசார் எருமவெட்டி பாளையம் பாலு என்ற 75 வயது முதியவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். முதியவரின் மிரட்டலுக்கு பயந்து அந்த சிறுமி வீட்டில் சொல்வதை தவிர்த்துள்ளார்.
அவர் சிறுமியிடம் அத்துமீறுவதை தடுக்காமல் வீடியோ எடுத்ததுடன், அதனை சமூக வலைதளத்தில் பரப்பிய சதீஷ், விஜயகுமார் , ரமேஷ், கண்ணன் , பாஸ்கர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
மாணவி இறந்து விட்டதால் யாருக்கும் தெரியாது என்ற நினைப்பில் வீடியோவை பகிர்ந்தவர்களும் இந்த வழக்கில் சிக்கி இருப்பது குறிப்பிடதக்கது.
Comments