மகன் தற்கொலை செய்துக்கொண்டது தெரியாமல் அவரது உடலுடன் 3 நாட்களாக உணவருந்தாமல் தவித்த மனநலம் குன்றிய தாய்

0 4538

கோவை ஆவாரம்பாளையம் ஸ்ரீவல்லி நகரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்ட மகனின் உடலுடன் பூட்டிய வீட்டிற்குள் தவித்துக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட தாயை 3 நாட்களுக்கு பிறகு போலீசார் மீட்டனர்.

திருமணம் ஆகாத 43 வயது சிபி சுப்பிரமணியம் தனது மனநலம் பாதிக்கப்பட்ட தாயாருடன் ஸ்ரீவல்லி நகரில் வசித்து வந்தார். கடந்த 3 நாட்களாக திறக்கப்படாமல் இருந்த அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

வீட்டிற்குள் மகன் தற்கொலை செய்துக்கொண்டது கூட தெரியாமல் கடந்த 3 நாட்களாக உணவருந்தாமல் தவித்துக் கொண்டிருந்த தாயை, போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments