அம்பை அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

0 2336

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள பிரசித்திபெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு சென்ற சிறுவர்கள் இரண்டு பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

பாபநாசம் மலையில் உள்ள இக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு  மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த உறவினர்களான சரவணன் மற்றும் விஷ்ணுகுமார் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் இன்று கோயிலுக்கு சென்றனர். சரவணனின் 8 வயது மகன் கார்த்திக் மற்றும் விஷ்ணுகுமாரின் 10 வயது மகன் ஹரிஷ்குமார் ஆகிய இருவரும் கோயிலுக்கு எதிரே உள்ள ஆற்றின் அருகே விளையாடிக்கொண்டிருந்தனர்.

திடீரென மாயமான சிறுவர்கள் சிறிது நேரத்தில் ஆற்றில் மிதந்துகொண்டிருந்தனர். உடடினயாக அவர்களை மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments