6,400 சதுர அடி சதுரங்க பலகையில் நடைபெற்ற செஸ் போட்டி... செஸ் ஒலிம்பியாட்டை ஒட்டி தனியார் பள்ளியில் விழிப்புணர்வு

செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை கொளத்தூரில் உள்ள எவர்வின் தனியார் பள்ளியில் ஆறாயிரத்து 400 சதுர அடியில் பிரமாண்ட சதுரங்க பலகையில் செஸ் போட்டி நடைபெற்றது.
இதை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியின் போது, செஸ் ஒலிம்பியாட்டின் மஸ்கட்டான தம்பி முகமூடி அணிந்து வேட்டி சட்டையுடன் 50 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Comments