தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

0 2432

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், மதுரை, திருச்சி, கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில அதிகப்பட்சமாக 14 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments