அதிவேக இணைய சேவைக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் - ஜியோ, ஏர்டெல், வோடபோன், அதானி என்டர்பிரைசஸ் நிறுவனங்கள் பங்கேற்பு

0 4950

அதிவேக இணைய சேவைக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது.

4 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 72 ஜிகா ஹெர்ட்ஸ் 5ஜி அலைக்கற்றை ஏலம் பெறும் போட்டியில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடாபோன், அதானி என்டர்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

4ஜி இணைய சேவையைவிட பத்து மடங்கு அதிவேக இணையத் தொடர்பு கொண்ட 5ஜி அலைகற்றையை வாங்க 70 ஆயிரம் கோடி முதல் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை நிறுவனங்கள் செலவிடும் என தொலைத்தொடர்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளள.

மாலை 6 மணிக்கு பிறகு ரேடியோ அலைவரிசைகளுக்கான தேவையை பொறுத்து எத்தனை நாட்கள் ஏலம் நடைபெறும் என்பது முடிவு செய்யப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments