"தனிப்பட்ட சித்தாந்தம், அரசியல் நலன்களை விட நாடு முதன்மையானது" - பிரதமர் மோடி

எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் அரசின் பணிகளுக்கு தடைகளை ஏற்படுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சவுத்ரி ஹர்மோன் சிங் யாதவின், 10-வது ஆண்டு நினைவு தின நிகழ்வில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், தனி நபரையோ, கட்சியையோ எதிர்ப்பது நாட்டுக்கு எதிரான பகைமையாக மாறக் கூடாது என வலியுறுத்தினார்.
தனிப்பட்ட கொள்கைகளைவிட நாட்டு நலனை முதன்மையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளைக் கேட்டுக் கொண்டார்.
முந்தைய ஆட்சியில் செய்யத் தவறிய திட்டங்களை தாங்கள் செய்யும்போது எதிர்க்கட்சிகள் தடுத்து நிறுத்த முயற்சிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அவசரநிலை மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் போன்ற சமயங்களில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராடியதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.
அண்மைக்காலமாக சமூகம் மற்றும் நாட்டின் நலன்களை விட தனிப்பட்ட சித்தாந்தம், அரசியல் நலன்கள் அதிகரித்து வருவதாக மோடி மேலும் தெரிவித்தார்.
Comments