பெற்றோரிடம் பொறுப்பு துறப்பு படிவத்தில் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கும் கோவை தனியார் பள்ளி

0 42712
பெற்றோரிடம் பொறுப்பு துறப்பு படிவத்தில் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கும் கோவை தனியார் பள்ளி

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தி பொறுப்பு துறப்பு படிவத்தில் கையெழுத்து வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.

பள்ளியில் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்காது என்று அந்த படிவத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், அந்த படிவத்தில் கையெழுத்திடாவிட்டால் பள்ளி மாற்று சான்றிதழ் வாங்கி செல்லுமாறு வற்புறுத்தப்படுவதாவும் கூறப்படுகிறது.

ஆனால், பொறுப்பு துறப்பு படிவத்தில் பெற்றோரிடம் கையெழுத்து வாங்குவது உண்மைதான் என்றும், யாரையும் தாங்கள் கட்டாயப்படுத்தவில்லை என்றும் பள்ளியின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments