கடலூரில் வீட்டில் கட்டிலின் மெத்தைக்கடியில் புகுந்த 4 அடி நீள சாரைப்பாம்பு..!

0 19500
கடலூரில் வீட்டில் கட்டிலின் மெத்தைக்கடியில் புகுந்த 4 அடி நீள சாரைப்பாம்பு..!

கடலூரில் வீடு ஒன்றில் கட்டிலின் மெத்தைக்கடியில் புகுந்திருந்த சாரைப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது.

தாழங்குடா மீனவ கிராமத்தில் வசித்து வரும் சாரங்கபாணி என்பவர் தனது வீட்டில் கட்டிலின் மெத்தைக்கடியில் இருந்து வித்தியாசமாக சத்தம் வந்ததை கேட்டு மெத்தையை தூக்கிப்பார்த்தபோது பாம்பு இருந்துள்ளது.

இதையடுத்து சாரங்கபாணி, பாம்புபிடி வீரர் செல்லாவிற்கு தகவல் கொடுத்து அவரை வரவழைத்தார். பின்னர் அங்கு சென்ற செல்லா பாம்பை லாவகமாக பிடித்துச்சென்று காப்புக்காட்டிற்குள் விடுவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments