விழுப்புரத்தில் மருந்தியல் கல்லூரி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி..!

0 40646
விழுப்புரத்தில் மருந்தியல் கல்லூரி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி..!

விழுப்புரம் அருகே தனியார் மருந்தியல் கல்லூரியின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற அக்கல்லூரி மாணவி, குடும்ப பிரச்சனை காரணமாக அவ்வாறு செய்ததாக தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

விக்கிரவாண்டியில் உள்ள அக்கல்லூரியின் மருந்தியல் துறையில் முதலாமாண்டு பயிலும் மாணவி இன்று, முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார்.

இது குறித்து காவல் உதவி கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, துணைக் கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் இரு தனிப்படைகள் விசாரித்து வருகின்றனர்.

மாணவிக்கு இடுப்புப் பகுதியில் அறுவை சிகிச்சை நடந்த நிலையில், அவரிடம் நீதிபதி மாலதி வாக்குமூலம் பெற உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments