செஞ்சியில் இரு சொகுசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

0 1952
செஞ்சியில் இரு சொகுசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இரு சொகுசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளனது தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே கர்நாடக அரசின் சொகுசுப் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. சாலையில் சென்ற கார் ஒன்றை அப்பேருந்து முந்த முயன்றபோது எதிர்பாராவிதமாக எதிரே வந்த தனியார் சொகுசுப் பேருந்து மீது மோதி விபத்திற்குள்ளானது.

விபத்தை அடுத்து, பர்மிட் இல்லாமல் இயக்கப்பட்ட அந்த தனியார் பேருந்தின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடினார். விபத்தில் காயமடைந்த 8 பேர் சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments