திடீரென சாலையின் மறுபக்கத்திற்கு சென்ற கார் எதிரே வந்த மினி சரக்குலாரி மீது மோதி விபத்து

0 1530
திடீரென சாலையின் மறுபக்கத்திற்கு சென்ற கார் எதிரே வந்த மினி சரக்குலாரி மீது மோதி விபத்து

கேரள மாநிலம் வயநாட்டில் திடீரென சாலையின் மறுபக்கத்திற்கு சென்ற மாருதி சுவிப்ட் கார் எதிரே வந்த மினி சரக்குலாரி மீது மோதி விபத்துக்குள்ளான காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளன.

மலபார் பகுதியில் இருந்து பத்தேரி நோக்கி சென்று கொண்டிருந்த கார், கல்பேட்டா பகுதியில் சென்ற போது ஓட்டுநர் தூங்கியதாக கூறப்படும் நிலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மறுபக்கம் சென்றுள்ளது.

கார் ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கல்பேட்டா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments