நம்ம ஊரு விலங்குகள் வில்லங்கமா சிந்திச்சா இது தான் நடக்கும்...! புரூஸ்லி வீட்டு குதிரையா இருக்குமோ

0 2659

தங்களை கட்டுப்படுத்த முயலும் மனிதர்களை விலங்குகள் தாக்கி விழவைக்கும் வீடியோக்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

கோவில் கொடை விழா ஒன்றில் ஆட்டை அடித்துக் கொண்று பலியிட முயன்ற போது, டக்கென்று ஆடுவிலகிக் கொண்டதால் பலியிடுவதற்காக கட்டையை ஒங்கி அடித்தவர் நிற்க இயலாமல் நிலை தடுமாறி குப்புற விழுந்தார்

இதே போல பாகிஸ்தானின் கராச்சியில் குதிரை ஒன்றை கயிறு கொண்டு சிலர் கட்டுவதற்கு முயல பிடிகொடுக்காத அந்த குதிரை , தன்னை நெருங்கி வந்தவரை முன்னிரண்டு கால்களால் பதம் பார்க்க எத்தனித்ததால் குதிரை பிடிப்பவர் நிலைதடுமாறி விழுந்தார்

அதே போல பலர் முன்னிலையில் குதிரையை நடனம் ஆட வைத்த பயிற்சியாளரை படக்கென்று பின்னங்காலால் பதம் பார்த்ததால், அவர் ஆடிக்கொண்டே அடியில் வலியை சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்

விலங்குகள் விபரீதமாக சிந்தித்தால் என இந்த வீடியோக்கள் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments