செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்..!

0 1943

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான முன்னேற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. 

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடர் வரும் வியாழக்கிழமை முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை சென்னை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 187 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

பல்வேறு நாடுகளில் இருந்து விமானம் மூலம் வீரர்கள், பயிற்சியாளர்கள், சர்வதேச செஸ் சங்கத்தின் பிரதிநிதிகளும் சென்னை வந்தபடி உள்ளனர். போட்டி நடைபெற இருப்பதை முன்னிட்டு பூஞ்சேரி - ஈசிஆர் சாலை, ஓ.எம்.ஆர் சாலை 53 கோடி ரூபாய் செலவில் பொதுப்பணித் துறையினரால் மேம்படுத்தப்பட்டுள்ளது. LED மின் விளக்கு மின் கோபுரம், CCTV கண்காணிப்புப் கேமரா கோபுரம், உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதாரத்துறை சார்பில் 7 மருத்துவக் குழுக்கள், 30 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. போட்டி நடைபெறும் இடத்திற்கு பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்து சேவைகள் இயக்கப்பட உள்ளதாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

தலா 34 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்ட 707 சென்சார் வசதி கொண்ட செஸ் போர்டுகள் ஒத்திகை பார்க்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒத்திக்கை போட்டியில் தமிழகத்தை சார்ந்த கிராண்ட்மாஸ்டர் விஷ்ணு பிரசன்னா 9 சுற்றுகளில் வெற்றி பெற்றார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வெளிநாடுகளில் இருந்து வரும் வீரர், வீராங்கனைகளுக்கு குரங்கு அம்மை பரிசோதனை செய்ய சென்னை விமான நிலையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments