வேகம் பிடிக்குது தம் சிக்கு தம் சிக்... காரு இடிக்குது தம் சிக்கு தம் சிக்... மழையில் குளித்த மாவீரனுக்கு மாவுக்கட்டு

0 7005

கொட்டும் மழையில் இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு, சாலையில் நின்று கொண்டாட்டமாக குளித்தவர் மீது கார் மோதியதால் தூக்கி வீசப்பட்டார்.

ஒரு புறம் கனமழை கொட்டித்தீர்க்க.. மறுபுறம் இடி மின்னல் அதிரவைக்க , அதனை கண்டு அசராத ஆப் பாடி அர்ணால்டு ஒருவர், வீட்டு மாடியில் இருந்து வீதியில் விழும் மழை நீரை குற்றால அருவியாக பாவித்து கொண்டாட்டமாக குளித்துக்கொண்டிருந்தார்.

அவரது சந்தோசம் கன நேரம் கூட நீடிக்கவில்லை, அதற்குள்ளாக அந்த வழியாக வந்த கார் அவரை அடித்து தூக்கியது.

மனம் குளிர குளித்துக் கொண்டிருந்தவரோ சாலையில் வந்த காரை கவனிக்கவில்லை,.. காரால் இடித்த வேகத்தில் குஷியாக குளித்தவர் அப்படியே அடித்து தூக்கி வீசப்பட்டார்.

இந்த சம்பவத்தில் இருவர் மீதுமே தவறு இருப்பதாக சொல்லப்பட்டாலும், சாலையை பாத் ரூம் ஆக்கியவரை பறக்க விட்டதால் , மழையில் குளித்த அந்த மாவீரனுக்கு மாவுக்கட்டு போடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாழ்க்கையின்னா சில அடிகள் விழத்தான் செய்யும் என்பது போல சாலையில் குளித்தவரை சில அடிதூரம் அந்தரத்தில் பறக்க விட்டு சாவு பயத்தை காட்டி இருக்கிறார் அந்த குரும்புக்கார ஓட்டுனர்..! என்று வட மாநிலம் ஒன்றில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments