நர்சிங் மாணவி தலையை துண்டித்து கையில் தூக்கிச்சென்ற காதலன்..! அதிர்ந்துபோன போலீசார்..!

0 19169
நர்சிங் மாணவி தலையை துண்டித்து கையில் தூக்கிச்சென்ற காதலன்..! அதிர்ந்துபோன போலீசார்..!

நர்சிங் மாணவியை தலையை துண்டித்து படுகொலை செய்து ரத்தம் சொட்ட, சொட்ட தலையுடன் போலீஸ் நிலையம் தூக்கிச்சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். 

கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் கூடலகி தாலுகா கானஒசஹள்ளி பகுதியை சேர்ந்தவர் போஜராஜா. 26 வயதான இவர் நிர்மலா என்ற 23 வயது பெண்ணை காதலித்து வந்தார்.

நிர்மலா, ஒசப்பேட்டையில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் 3 வது ஆண்டு படித்து வந்தநிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு , அவருடனான காதலை முறித்துக் கொண்ட போஜராஜா, வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இதை அறிந்து ஆத்திரம் அடைந்த நிர்மலா, போஜராஜாவுடன் கடும் வாக்குவாதம் செய்து வந்ததுடன், தங்கள் காதல் விவகாரத்தையும் ஒன்றாக இருந்த போது எடுத்த நெருக்கமான புகைப்படங்களையும் அவரது மனைவியிடம் போட்டுக் கொடுத்து விடுவதாக கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனால் முன்னாள் காதலி மீது போஜராஜா ஆத்திரத்தில் இருந்தார். 3 நாட்களுக்கு முன்பு கல்லூரி விடுதியில் இருந்து நிர்மலா ,சொந்த ஊருக்கு வந்திருக்கும் தகவல் போஜராஜாவுக்கு தெரியவந்தது.

செல்போனில் பிளாக்மெயில் செய்து வந்த நிர்மலாவின் வீட்டுக்கு நேரடியாக சென்ற போஜராஜா தான் மறைத்து எடுத்து சென்ற வீச்சரிவாளை எடுத்து கட்டிலில் படுத்திருந்த நிர்மலாவின் கழுத்தை அறுத்து தலையை துண்டாக்கினார்.

பின்னர் அரிவாளை அங்கேயே போட்டு விட்டு, ரத்தம் சொட்ட, சொட்ட துண்டித்த தலையை கையில் பிடித்தபடி வீதியில் தூக்கிச் சென்ற போஜராஜா, கானஒசஹள்ளி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

துண்டித்த தலையுடன் அவரை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்து நடந்தது என்ன என்று விசாரித்தபோது, தான் வேறொரு பெண்ணை திருமணம் செய்ததால் முன்னாள் காதலியான நிர்மலா, காதல் விவகாரம் குறித்து மனைவியிடம் கூறிவிடுவதாக தொடர்ச்சியாக பிளாக்மெயில் செய்து நிம்மதியை கெடுத்ததால், ஆத்திரத்தில் அவரை கொலை செய்து தலையுடன் போலீஸ் நிலையம் வந்திருப்பதாக கூறினார்.

இதையடுத்து நிர்மலாவின் வீட்டுக்கு சென்ற போலீசார், தலையில்லா முண்டமாக கிடந்த அவரது உடலை மீட்டு பிணக்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments