சேலத்தில் கைதுக்கு பயந்து ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த ரவுடிக்கு கால் முறிவு..!

0 2515
சேலத்தில் கைதுக்கு பயந்து ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த ரவுடிக்கு கால் முறிவு..!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கைதுக்கு பயந்து ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த ரவுடிக்கு கால் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 22ம் தேதி இரவு வ.உ.சி நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்த ரவுடி சீனிவாசனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், கருமலைக்கூடல் அருகே சிட்கோ பகுதியில் மறைந்திருந்தவரை பிடிக்க முற்பட்டபோது, ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த ரவுடிக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments