மதுரையில் ஒரே தேர்வு மையத்தில் தனது 47 வயது தாயுடன் குரூப் 4 தேர்வெழுதிய மகள்..!

0 14201
மதுரையில் ஒரே தேர்வு மையத்தில் தனது 47 வயது தாயுடன் குரூப் 4 தேர்வெழுதிய மகள்..!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, தாயும், மகளும் ஒரே மையத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு எழுதினர்.

என்.ஜி.ஓ நகரைச் சேர்ந்த 47 வயதான வளர்மதி பி.ஏ தமிழ் படித்துள்ளார். இவரது மகள் சத்ய பிரியா நீட் தேர்வுக்கு படித்து 2 முறை தேர்வு எழுதியுள்ளார்.

இந்நிலையில் குரூப் 4 தேர்வு எழுத விரும்பிய வளர்மதி, தன்னுடன் சேர்ந்து தேர்வெழுதுமாறு மகளிடம் கேட்டுக் கொண்டார். 

இருவரும் தேர்வுக்கு விண்ணப்பித்ததை அடுத்து, கள்ளிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட நிலையில், இன்று தாயும் மகளும் ஒன்றாக தேர்வு மையத்திற்கு வந்து தேர்வெழுதினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments